Enable Javscript for better performance
சீர்காழி குமரக்கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி குமரக்கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 31st March 2018 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி குமரக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    சீர்காழி பிடாரி வடக்கு வீதியில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கோயில் உள்ளது. இக்கோயிலில், முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சித் தருகிறார். இங்கு பங்குனி உத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    முருகப்பெருமானுக்கு மஞ்சள், திரவியப்பொடி, விபூதி, தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சர்க்கரை, பன்னீர், பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு  சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம், மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    இதேபோல் சட்டைநாதர் கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் மண்டபகுமாரர், சம்ஹாரவேலர் ஆகிய சுவாமிகளுக்கும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai