Enable Javscript for better performance
திருநகரி கல்யாண ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருநகரி கல்யாண ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியை அடுத்த திருநகரி கல்யாணரெங்கநாதர் பெருமாள் கோயிலில், பங்குனி உத்ஸவத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நாகை மாவட்டம், திருநகரி கிராமத்தில் 108 திவ்யதேசத்தில் ஒன்றான அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பெருமாள் தேவியர்களுடன் அமர்ந்த நிலையில் காட்சித் தருகிறார். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வாரின் அவதார தலமான இக்கோயிலின் பங்குனிப் பெருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோயிலில் இருந்து அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் ஒரு தேரிலும், குமுதவள்ளி நாச்சியார் சமேத திருமங்கை ஆழ்வார் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.
    முதலில் பெருமாள் தேரையும், தொடர்ந்து ஆழ்வாரின் தேரையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் கோஷம் முழங்க, தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai