Enable Javscript for better performance
திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இந்த விழா மார்ச் 22-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
    விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு கோயில் முன்பு அலங்கரிக்கப்பட்ட நிலையில், நிறுத்தப்பட்டிருந்தத் தேரில் பெருமாளை எழுந்தருளல் செய்யும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செ. சிவராம்குமார், கோயில் செயல் அலுவலர் பா. முருகன், தொழிலதிபர் எஸ். ரமணி ஆகியோர் வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். காலை 9-மணிக்குத் தொடங்கிய தேரோட்டம், 4 வீதிகள் வழியாகச் சென்று பிற்பகல் 1 மணியளவில் நிலையை வந்தடைந்தது.
    தொடர்ச்சியாக கோயிலின் எதிரேயுள்ள சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரியும், மாலை 4 மணிக்கு தாயார் திருமஞ்சனமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், இந்து சமய அறநியைத்துறை ஆய்வாளர்கள் உத்திராபதி (மயிலாடுதுறை தெற்கு), கோ. ரவி (மயிலாடுதுறை வடக்கு), கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai