Enable Javscript for better performance
தோப்புத்துறை பள்ளியில் எழுபெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் (இந்து) இரண்டு நாள்கள் நடைபெற்ற நூலகம் திறப்பு விழா உள்ளிட்ட எழுபெரும் விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
    இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத் தொழில்நுட்பப் புல முதல்வருமான எஸ். சிவநேசன் பங்கேற்றுப் பேசினார். விழாவிவுக்கு பள்ளி தலைமையாசிரியர் சு. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.
    முஸ்லிம் ஜமாத் மன்றத்  தலைவர் நவாஸ்தீன், இந்து நற்பணி மன்றத் தலைவர் சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ. நாகூரான், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அனுசுயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    நிகழ்ச்சியில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, ராஜமாணிக்கம், புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ந. சேகர், ஆரிப்பா குழுமத் தலைவர் சுல்தானூல் ஆரிபின், ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai