Enable Javscript for better performance
மேலையூர் மந்த கருப்பண்ணசாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    மேலையூர் மந்த கருப்பண்ணசாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா

    By DIN  |   Published on : 31st March 2018 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலையூர் மந்த கருப்பண்ணசாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    மேலையூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற மந்த கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வியாழக்கிழமை முளைப்பாலி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, காவிரி ஆற்றங்கரையிலிருந்து பால் குடம் மற்றும் காவடிகள் எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து மந்த கருப்பண்ணசாமி, காளியம்மன், ஏழை காத்தம்மன், ஊரணி ஐயனார், காசிலிங்க பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. 
    300-க்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலில் இருந்து முளைப்பாலிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கஞ்சாநகரம் புத்தர்குளத்தில் விட்டனர். மேலும், பெண்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai