Enable Javscript for better performance
வேதாரண்யம் வர்த்தகர் சங்க முன்னாள் தலைவர் நினைவு நாள்: பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் வர்த்தகர் சங்க முன்னாள் தலைவர் நினைவு நாள்: பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் எஸ்.எஸ். அறக்கட்டளை சார்பில், வர்த்தகர் சங்க முன்னாள் தலைவர் எஸ். சிவசுந்தரத்தின் 6-ஆம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் இலக்கியப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    வேதாரண்யத்தைச் சேர்ந்த எஸ். சிவசுந்தரம், வணிகர் சங்க பேரமைப்பின் மண்டலத் தலைவர் மற்றும் அரிமா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இவரது 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, எஸ்.எஸ். அறக்கட்டளை சார்பில் நகராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 
    இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் மா. மீனாட்சிசுந்தரம், வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவரும், எஸ்.எஸ். அறக்கட்டளைச் செயலாளருமான எஸ்.எஸ். தென்னரசு, மாவட்டத் தலைவர் பி. குணசேகரன், பேராசிரியர் ந. சாந்தகுமாரி, அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ். வேதநாயகம், தலைமையாசிரியர் சு. குமார், வர்த்தகர் சங்கச் செயலாளர் சுபஹெனி, கவிஞர் பெ. காந்திநாதன், கனகம் சிவசுந்தரம், அரிவையர் சங்க நிர்வாகிகள் மல்லிகா தென்னரசு, கவிதா அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இலக்கியப் போட்டிகளில் வென்ற முதல் மூன்று பேருக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரமும், பாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு முறையே ரூ.3ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ.1,000 ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது. தவிர 60 மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, வர்த்தகர் சங்கக் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள எஸ். சிவசுந்தரம் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai