Enable Javscript for better performance
வைத்தியநாத சுவாமி கோயிலில் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு தீர்த்தவாரி- Dinamani

சுடச்சுட

    

    வைத்தியநாத சுவாமி கோயிலில் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு தீர்த்தவாரி

    By DIN  |   Published on : 31st March 2018 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி பிரமோத்ஸசவ விழாவையொட்டி, பஞ்சமூர்த்தி சுவாமிகள் தீர்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில், தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விழாவின் முக்கிய நிகழ்வாக 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைதொடர்ந்து விநாயகர், வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்பாள், செல்வமுத்துக்குமாரசாமி, அங்காரகன், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    மேலும், பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலா புறப்பாடு முடிந்து, கோயில் சித்தாமிர்த தீர்த்தகுளத்தில் உள்ள ருத்ரபாத தீர்த்த மண்டபத்துக்கு எழுந்தருளினர். பஞ்சமூர்த்தி சுவாமிகள் முன்னிலையில்  அஸ்திரத்தேவருக்கு சிவாச்சாரியார்கள் அபிஷேகம், ஆராதனைகள் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து அஸ்திரத்தேவர் தீர்த்தத்தில் நீராட, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் குளத்தில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai