Enable Javscript for better performance
கல்லூரி உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

    By DIN  |   Published on : 18th May 2018 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், ஒரு பொறியியல் கல்லூரி உணவகத்தில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையத்துக்கு கட்செவி அஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்ற புகாரின் பேரில், நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன்,  வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மகாராஜன் ஆகியோர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
    சோதனையின்போது, கை கழுவும் இடத்தில் சோப்பு வைக்க வேண்டும், உணவை கையாளுபவர்கள் தன் சுத்தம் பராமரிக்க வேண்டும், உணவுப் பொருள்களின் காலாவதி விவரம் அறிந்து பயன்படுத்த வேண்டும், உணவு பரிமாறும் முன்பாக சுமார் அரை கிலோ அளவில் உணவு மாதிரிகளை எடுத்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai