Enable Javscript for better performance
கல்விக் கட்டணங்களை கூடுதலாக வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்: தமுஎகச மாநாட்டில் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கல்விக் கட்டணங்களை கூடுதலாக வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்: தமுஎகச மாநாட்டில் கோரிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க (தமுஎகச) கீழ்வேளூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
    தமுஎகச கீழ்வேளூர் கிளை மாநாடு, கீழ்வேளூர் சிஐடியு அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.  மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் எல்.பி. சாமி தலைமை வகித்தார்.
    மாவட்டத் துணைச் செயலாளர் சு. மணி, துணைத் தலைவர் வி. மாரிமுத்து, நிர்வாகிகள் எஸ். மோகன் இங்கர்சால், வீரா. செந்தில் ஆகியோர் பேசினர்.
    நிர்வாகிகள் தேர்வு...
    தமுஎகச கீழ்வேளூர் கிளைத் தலைவராக எல்.பி. சாமி, செயலராக எஸ். மோகன் இங்கர்சால், பொருளாளராக வீரா. செந்தில், துணைத் தலைவர்களாக எஸ். குலாம் முகமது, ஆர். ராமநாதன், எஸ். செந்தில்குமார், துணைச் செயலாளர்களாக சி. கார்த்திகேசன், டி. தேவதாஸ், எஸ். நரேஷ்குமார் மற்றும் 8 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    இந்த மாநாட்டில், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் ஏழை, எளிய மக்களிடமிருந்து அதிகளவில் கட்டணங்கள் வசூலிப்பதை உடனடியாகத் தடுக்க கல்வித்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு, அனைவருக்கும் சமத்துவக் கல்வி கிடைக்கும் வகையில் கல்விக் கட்டணத்தை சீரமைக்க வேண்டும் என தீர்மானம்
    நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai