Enable Javscript for better performance
கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணி தீவிரம்: நிலத்தடி நீர் குறைவால் சாகுபடி பரப்பு குறைவு- Dinamani

சுடச்சுட

    

    கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணி தீவிரம்: நிலத்தடி நீர் குறைவால் சாகுபடி பரப்பு குறைவு

    By DIN  |   Published on : 18th May 2018 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் பகுதியில் குறைந்த அளவு நிலப்பரப்பில் குறுவை நெற்பயிர் சாகுபடி தீவிரமடைந்து வருகிறது.
    நாகை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள 42 ஊராட்சிக்குள்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 10 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து மழைப் பொழிவு குறைவு காவிரியில் போதிய தண்ணீர் கிடைக்காதது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறையத் தொடங்கியதால், சாகுபடி பரப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது.
    இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 2, 500 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது. நிகழாண்டு அதுவும் குறைந்து, சில இடங்களில் மட்டுமே குறுவை சாகுபடி தீவிரமடைந்து வருகிறது. தற்போது, விவசாயிகள் நாற்றாங்கால் அமைத்துள்ளனர். சிலர் நடவு பணியைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, மாதிரவேளூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியது: நிலத்தடி நீர் இல்லாததால் கொள்ளிடம் பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் வட்டாரத்தில் கடந்த ஆண்டு 2, 500 ஹெக்டேரில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. நிகழாண்டு 1,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்வதே கடினம். எனவே, கொள்ளிடம் கடை மடைப் பகுதிக்கு தண்ணீர் பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai