Enable Javscript for better performance
சீர்காழியில் 75 ஆண்டு பழைமை வாய்ந்த பள்ளி அதே இடத்தில் இயங்க வட்டாட்சியர் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் 75 ஆண்டு பழைமை வாய்ந்த பள்ளி அதே இடத்தில் இயங்க வட்டாட்சியர் நடவடிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியில் 75 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ச.மு.இ. அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை  இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அப்பள்ளி அதே இடத்தில் இயங்க வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார்.
    சீர்காழி கீழவீதியில் உள்ள இப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகள் வரை உள்ளது. தற்போது 75 மாணவ, மாணவியருக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் என இரண்டு பெண் ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1942-இல் தொடங்கப்பட்ட இப்பள்ளி தற்போது வரை வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. 
    இந்நிலையில் இந்த பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க போவதாக தகவல் பரவியது. இதனால், பள்ளியை இடமாற்றம் செய்யும் சூழல் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்நிலையில், சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன் இந்த பள்ளியில் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் லெட்சுமி, ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, அம்பிகை விலாஸ் பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் அம்பலவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    பின்னர் வட்டாட்சியர் பாலமுருகன் கூறும்போது, இந்த பள்ளி அதே இடத்தில் இயங்கும் என்றும்,  வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழக்கம்போல் நடைபெற வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நிலவி வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai