Enable Javscript for better performance
டெங்கு விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    திருவெண்காட்டில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
    சீர்காழி வட்டார சுகாதாரத் துறை சார்பில் திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மனிதச் சங்கிலி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
    விழிப்புணர்வுப் பேரணிக்கு வட்டார மருத்துவ அலுவலர்(பொ) கனிமொழி தலைமை வகித்தார். உதவி மருத்துவ அலுவலர் பொன்ஏழில் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட பூச்சியில் வல்லுநர் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராமன், சுகுமார், செல்வராஜ், அமிர்தலிங்கம், ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் துரைகார்த்திக் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai