Enable Javscript for better performance
நாகையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: 8 பேருக்கு ரூ. 3.40 லட்சம் மதிப்பிலான காசோலைகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாகையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: 8 பேருக்கு ரூ. 3.40 லட்சம் மதிப்பிலான காசோலைகள் அளிப்பு

    By DIN  |   Published on : 18th May 2018 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகையில் நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் 8 பேருக்கு ரூ. 3.40 லட்சத்துக்கான காசோலைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
    நாகை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
    இந்தக் கூட்டம் தொடர்பாக பெறப்பட்ட 30 மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மனுதாரர்களுக்கு விளக்கப்பட்டன. மேலும், குடும்பப் பாதுகாப்பு நிதி மற்றும் மருத்துவ நிதியின் கீழ் 8 பேருக்கு ரூ. 3.40 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன. சென்னை ஓய்வூதிய இணை இயக்குநர் எஸ். மஞ்சுளா, துணை இயக்குநர் கே. மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) க. கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai