Enable Javscript for better performance
புதுச்சேரி மாநில மதுபுட்டிகள் கடத்தியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு மதுபுட்டிகள் கடத்தி வந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
    பொறையாறு போலீஸாருக்கு காரைக்காலிலிருந்து மதுபுட்டிகள் கடத்தி வருவதாக கிடைத்த தகலையடுத்து, போலீஸார் நண்டலாறு சோதனைச் சாவடியில், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரைக்காலிலிருந்து வந்த பால் வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தபோது, 74 அட்டை பெட்டிகளில் 3,552 மதுபுட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் மதுபுட்டி கடத்திய பால் வாகன ஓட்டுநர் திருக்குவாளைக்கா கிராமத்தை சேர்ந்த சதீஷ் (24) என்பவரை கைது செய்து, மதுபுட்டி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தி வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai