Enable Javscript for better performance
மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் மக்கள் நீதி மய்யத்தின் நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு நகரப் பொறுப்பாளர் கே.எஸ். சந்துரு தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே.எஸ். தியாகராஜன், எஸ். பாஸ்கரன், கே. குமார், வழக்குரைஞர் சுந்தரம், வி. தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில் கோடை காலத்தையொட்டி, நகரில் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நீர்மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்குவது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, புதிதாக கொடிமரம் அமைத்து கட்சிக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில் எஸ்.மோகன், மணிகண்டன், இன்பசேகரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai