அவுரிக்காடு-வண்டல் கிராமங்களுக்கு இன்று முதல் கட்டணமில்லா படகுப் போக்குவரத்து

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அவுரிக்காடு- வண்டல் கிராமமக்கள், மழை நீர் பெருக்கெடுத்துள்ள

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அவுரிக்காடு- வண்டல் கிராமமக்கள், மழை நீர் பெருக்கெடுத்துள்ள அடப்பாற்றின் குறுக்கே பயணிக்க ஏதுவாக கட்டணம் இல்லாத படகுப் போக்குவரத்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குள்பட்ட வண்டல், குண்டூரான்வெளி கிராமங்கள் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெள்ள நீரால் சூழப்பட்டு மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
வண்டல், குண்டூரான்வெளி கிராமத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட  பல்வேறு தேவைகளுக்காக அப்பகுதியில் செல்லும் அடப்பாற்றைக் கடந்து அவுரிக்காடு கிராமத்தின் வழியே வெளியிடங்களுக்கு செல்லவேண்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரத்தில் பெய்த மழையால் நீர்நிலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. அடப்பாற்றின் குறுக்கே 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணி முடிவடையாத நிலையில், தண்ணீரின் அளவு அதிகரித்ததால் மக்கள் நடந்து செல்வது பாதிப்படைந்தது. 
இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களாக தனியார் கண்ணாடியிழைப் படகு ஒன்று இயக்கப்பட்டு மக்கள் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.
இதையடுத்து, கட்டணம் இல்லாத படகுப் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர். 
இந்நிலையில், விசாரணை மேற்கொண்ட வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை (நவ.9) முதல் மீன்வளத்துறையின் சார்பில் கட்டணம் இல்லாத கண்ணாடியிழைப் படகு சேவையை அடப்பாற்றின் குறுக்கே தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


சீர்காழியில்...
நாகை மாவட்டம், சீர்காழியில் விஜய் நடித்த சர்கார் பட டிஜிட்டல் பேனர்கள் வியாழக்கிழமை மாலை அகற்றப்பட்டன. 
தீபாவளியையொட்டி, நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது. சீர்காழியில் 2 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, சீர்காழி காந்திபூங்கா அருகே திரையரங்கம் உள்ள பகுதியிலும், கொள்ளிட முக்கூட்டு பகுதியில் திரையரங்கம் உள்ள பகுதியிலும் சாலையோரம் பிரமாண்ட டிஜிட்டல் பேனர்களை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர். 
இந்நிலையில், சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதை அகற்ற வேண்டும் என தமிழக அமைச்சர்கள் கூறி வந்தனர். மேலும், சீர்காழியில் சர்கார் படம் வெளியான திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அதிமுகவினர் திட்டமிட்டதாக தெரிகிறது. 
இதனால், சீர்காழி போலீஸார் திரையரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்றுமாறு விஜய் ரசிகர்களை அறிவுறுத்தினர். இதையடுத்து, பேனர்கள்
அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com