பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட  விவசாயிகள் ஆர்வம்!

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் நடைபெற்று வரும் சம்பா சாகுபடியில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் நடைபெற்று வரும் சம்பா சாகுபடியில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ளது. நாற்றங்காலில் இருந்து நாற்றுகள் பறிக்கப்பட்டு, நடவு செய்யும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக நிறுத்தப்பட்ட விவசாயப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
சீர்காழி வட்டத்துக்குள்பட்ட நாங்கூர், திருவெண்காடு, நிம்மேலி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் பாரம்பரிய நெல் ரக சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருவெண்காடு சின்னப்பெருந்தோட்டம் விவசாயியும், ஆசிரியருமான அம்பேத்தமிழ்செல்வன் கூறுகையில், கடந்த ஓராண்டாக பாரம்பரிய நெல் ரகங்களை  சாகுபடி செய்து வருகிறேன். தற்போது, மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, சீரக சம்பா, தூயமல்லி மற்றும் நாட்டு பொன்னி ரகங்களை சாகுபடி செய்துள்ளேன். இந்த நெல் ரகங்கள் சுமார் 160 நாள்களைக் கொண்ட பயிராகும். 
இப் பயிர்களில் பூச்சி தாக்குதல் பெருமளவு குறைவு.
பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்வதற்கு முன்பு வேப்பம் புண்ணாக்கு, கடல்பாசி ஆகிய இயற்கை உரங்களை அடியுரமாக இட வேண்டும். பட்ட நடவு செய்து வாரந்தோறும் பஞ்சகவ்யம், அமிர்த கரசலை ஸ்பிரேயர் கொண்டு பயிர் முழுவதும் தெளிக்க வேண்டும். இந்த முறைகளில் நெற்பயிர் சாகுபடியை மேற்கொண்டால், அதிக மகசூல் கிடைப்பதுடன், அரிசி நல்ல சுவையுடன் இருக்கும் 
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com