"முறைகேடாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை'

முறையற்ற இணைப்பை பயன்படுத்தி தண்ணீர் எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீர்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

முறையற்ற இணைப்பை பயன்படுத்தி தண்ணீர் எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீர்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், முதலைமேடு, ஆரப்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில், சீர்காழி வட்டாட்சியர் சங்கர் தலைமையில், பறக்கும் படையினர் பொதுக்குடிநீர் குழாய்களை ஆய்வு செய்தனர். அப்போது, 40-க்கும் மேற்பட்ட முறைகேடான குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தனர். 
இந்நிலையில், முதலைமேடு கிராமத்தில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதை சீர்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் வடரெங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட்டு, பழையபாளையத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் தேக்கி வைக்கப்படுகிறது.  பின்னர், அங்கிருந்து பிரதான நீரேற்றுக்குழாய் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு, கோதண்டபுரம், முதலைமேடு, அளக்குடி, பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இக்குழாயின் மூலம் முறையற்ற குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்தி, தனி நபர்களால் முறைகேடாக தண்ணீர் எடுக்க பயன்பட்டு வந்த 40-க்கும் மேற்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முறைகேடாக குடிநீர் இணைப்பை பயன்படுத்தி, தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அப்போது, அதிகாரிகள் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக செயலாளர் நற்குணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com