கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல்: ஆட்சியர் தகவல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், சன்ன மற்றும் பொது ரக நெல் வகைகள் கூடுதல் விலைக்கு கொள்முதல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், சன்ன மற்றும் பொது ரக நெல் வகைகள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் 2018-19 கே.எம்.எஸ். பருவத்துக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெறுகிறது. இந்நிலையில், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு சன்னரக நெல், குவிண்டால் ரூ. 70 ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ. 1,840, பொது ரக நெல் குவிண்டால் ரூ. 50 ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ. 1,800 என்ற புதிய விலைகளில் கொள்முதல் செய்யப்படும். ஆகையால், நாகை மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com