தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்துக்குள்பட்ட தேரழுந்தூரில் எழுந்தருளிய ஆமருவியப்பன் கோயிலில்

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்துக்குள்பட்ட தேரழுந்தூரில் எழுந்தருளிய ஆமருவியப்பன் கோயிலில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
108 வைணவ திவ்ய தேசங்களுள் 10-ஆவது கோயிலாகத் திகழும் ஆமருவியப்பன் கோயிலில், புரட்டாசி பிரமோத்ஸவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் மற்றும் உத்ஸவருக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, 1008 கலசங்களில் வெண்ணெய் கொண்டு நிரப்பப்பட்டு, சுவாமிக்கு படைக்கப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com