புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சீர்காழி பகுதியில் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சீர்காழி பகுதியில் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லோகநாயகி தாயார் சமேத தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை முதலே திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், எருக்கூர் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நாங்கூர் அல்லிமாமலராள் சமேத செம்பொன்னரங்கர் கோயில், வைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதப் பெருமாள் கோயில், பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோயில்,திருத்தேற்றியம்பலம் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயில், மணிமாட கோயில் பகுதியில் அருள்பாலிக்கும் நாராயணப் பெருமாள் கோயில், அண்ணன் கோயில் கிராமத்தில் அருள்பாலிக்கும் அண்ணன் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து வைணவத் திருக்கோயில்களிலும் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை வழிபாடுகள் நடைபெற்றன.
திருநகரி கல்யாண ரெங்கநாதப் பெருமாள்,  மங்கைமடம் செங்கமல வல்லித் தாயார் உடனாகிய வீரநரசிம்மப் பெருமாள் கோயில், திருவாலி லெட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில், திருநகரி ஹிரண்ய நரசிம்மர் கோயில், யோக நரசிம்மர் கோயில் மற்றும் திருக்குறவளூர் உக்கிர நரசிம்மப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com