ஆற்றின் முகத்துவாரங்களை தூர்வார வலியுறுத்தல்

மழைக்காலம் தீவிரமடைவதால், ஆற்றின் முகத்துவாரங்களை தூர்வாரி, வெள்ள தடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மழைக்காலம் தீவிரமடைவதால், ஆற்றின் முகத்துவாரங்களை தூர்வாரி, வெள்ள தடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமையில், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றபோது, கீழ்வேளூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பேசுகையில், கடைமடை வரை தண்ணீர் வந்துவிட்டது என்றும் மீன் பிடிப்பாளர்கள் இந்த தண்ணீரை கடலுக்குத் திறந்து விட்டதாகவும் கூறினார். அப்போது, குறுக்கிட்ட கீழ்வேளூரைச் சேர்ந்த தனபாலன், தண்ணீர் கடைமடை வரை வரவில்லை என்று குறிப்பிட்டார். இது காரசார விவாதமாக மாறியது. பின்னர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தியதன் பேரில், கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. 
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
எஸ்.ஆர். தமிழ்ச்செல்வன்: பாலையூர்  கீழ்வேளூர் வட்டம்,  தென் ஓடாச்சேரியில் தொடங்கும்  தேவநதி பாசன மற்றும் வடிகால் ஆறானது, பாலையூர் வழியாக மேலக்கோட்டை வாசல் பகுதியில் கடலில் கலக்கிறது. அமாவாசை, பெüர்ணமி காலங்களில்  கடல் நீர் உள்புகுந்து, செல்லூர், ஐவநல்லூர், வெளிப்பாளையம், தெத்தி, வடகுடி,  மேலநாகூர் போன்ற பகுதிகளில் விவசாயத்தை பாழ்படுத்துகிறது. அத்துடன் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. எனவே கடல் நீர் உள்புகுவதைத் தடுக்க இப்பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை  எடுக்க வேண்டும்.
வீ. சரபோஜி: செல்லூர்  விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதுடன், புதிய கடன்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை, உரம் உள்ளிட்டவற்றை  மானியத்துடன் வழங்க வேண்டும். ஓடம்போக்கி ஆறு இருக்கும் அழிஞ்சமங்கலம்,  ஐவநல்லூர்  வாய்க்கால்   உள்ளிட்டவற்றில் 30  சதவீத  தூர்வாரும்  பணிகளே  நடைபெற்றுள்ளன.  இந்த   இடங்களில் முழுபணியையும் முடித்தபிறகே  ஒப்பந்ததாரர்களுக்கு தொகை வழங்க வேண்டும். 
சா.வி.ராமகிருஷ்ணன்: கங்களாஞ்சேரி சம்பா சாகுபடிக்கும் தொகுப்புத்  திட்டம் வழங்க  நடவடிக்கை எடுக்க  வேண்டும். சாலையோரங்களில் உள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும். கங்களாஞ்சேரியிலிருந்து வண்ணான்துறை வரையிலான சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
த. பிரபாகரன்: ஓர்குடி  அரசு அறிவித்துள்ளபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 29,500}ஐ தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன் வடிகால் வசதிகளை சரி செய்ய வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மரக்கன்றுகள், வாய்க்கால் ஓரங்களிலும், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளின் ஓரங்களிலும் நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 
காவிரி தனபாலன்: நாகை  மாவட்டத்தில் பாயும் பிரதான ஆறுகளின் முகத்துவாரங்கள் இறால் பண்ணைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. மழைக்காலம் தீவிரமடைவதால், ஆறுகளைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை செயல்படுத்த வேண்டும். அத்துடன், வெள்ள தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல், மீன்வண்டிகள் சாலை முழுவதும் தண்ணீரை விட்டுச்செல்கின்றன.  இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். 
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்  சீ. சுரேஷ்குமார் பேசியது: நாகை  மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி 35,000 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,  37,050  ஹெக்டேர் நடவு செய்யப்பட்டுள்ளது. திருந்திய நெல் சாகுபடி மற்றும்  இயந்திர நடவு  மூலம் 27,679 ஹெக்டேரும், இயல்பான நடவு முறையில் 9,371 ஹெக்டேரும் நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
சம்பா மற்றும் தாளடி பருவத்துக்கு 1,31,500 ஹெக்டேர் இலக்கு பெறப்பட்டுள்ளது. தற்போது நேரடி விதைப்பு மூலம் 26,559 ஹெக்டேரும், திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திர நடவு மூலம் 250 ஹெக்டேரும், இயல்பான நடவு முறையில் 100 ஹெக்டேரும்  என மொத்தம் 26,909 ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது திருந்திய நெல் சாகுபடி இயந்திர நடவு மூலம் நடவு செய்வதற்கு 73.1 ஹெக்டேர் நாற்றங்காலும், இயல்பான நடவு முறையில் 460.5 ஹெக்டேர் நாற்றங்காலும் தயாராக உள்ளது.
2017}18 மற்றும் 2018}19}ஆம் நிதி ஆண்டில்  கரும்பு, பனை,  தென்னைப் பயிர்களில் சொட்டுநீர் பாசனம் மேற்கொள்ள 40 ஹெக்டேர் இலக்கும், இதர பயிர்களில் தெளிப்பு நீர் பாசனம் மேற்கொள்ள 6,750 ஹெக்டேரும் இலக்கு பெறப்பட்டு ரூ. 18.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5467 விவசாயிகளுக்கு 7566 ஹெக்டேர் பரப்பிற்கு இணையதள பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 402 விவசாயிகளுக்கு 454.78 ஹெக்டேர் பரப்பிற்கு 78.2 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி தேவைப்படும் ஆவணங்களை வழங்கி தங்களது பெயரை முன்கூட்டியே பதிவு செய்து பயன் பெறலாம் என்றார். 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணப்பிள்ளை, இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) நாராயணசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கா. ஜெயம், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com