வெடிபொருள்கள் விற்பனைக்கு செப். 28 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

வெடிபொருள்கள் சில்லறை விற்பனைக்கு செப். 28 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

வெடிபொருள்கள் சில்லறை விற்பனைக்கு செப். 28 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
வருவாய்த் துறை மூலமான 24 சேவைகளை, கணினி இணையவழி மூலம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்போது, 20 வகையான சேவைகள் கணினி இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது. இதில், வெடிபொருள்கள் சில்லறை விற்பனைக்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் இணையவழி மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிகழாண்டுக்கான தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி விட்டதால், பட்டாசுகள் சில்லறை விற்பனைக்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கு, வெடிபொருள் விதிகள் 2008 -இன்படி உரிய ஆவணங்களுடன் செப். 28 -ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு, அக். 20 -ஆம் தேதிக்குள் உரிமம் குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். செப். 28 -ஆம் தேதிக்குப் பின்னர் பெறப்படும் புதிய உரிமம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com