வெள்ளத்தில் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோட்டப் பயிர்ககளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோட்டப் பயிர்ககளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம்  ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோரம் உள்ள முதலைமேடுதிட்டு, சந்தப்படுகை, நாதல்படுகை, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் பாதித்ததுடன், சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளம், பருத்தி, அரும்பு, கத்திரி,வெண்டை, பச்சமிளகாய், மரவள்ளிக்  கிழங்கு உள்ளிட்ட தோட்டப் பயிர்கள்  தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், அப்பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். 
எனவே, சேதமடைந்த தோட்டப் பயிர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்கிடவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com