அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் இன்று செடில் திருவிழா

நாகை, அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பிரமோத்ஸவ விழாவில் தேரோட்டம், செடில்

நாகை, அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பிரமோத்ஸவ விழாவில் தேரோட்டம், செடில் திருவிழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை (செப். 16) நடைபெறுகின்றன.
அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பிரமோத்ஸ விழா செப். 7-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. செப். 8-ஆம் தேதி திருக்கொடியேற்றமும், செப். 12-ஆம் தேதி சமுத்திர வழிபாடும் நடைபெற்றன.
விழா நிகழ்ச்சியாக, தினமும் காலையில் அம்பாள் பிராகாரப் புறப்பாடும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது. பிரமோத்ஸ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் மற்றும் செடில் திருவிழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன.
காலை 8 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு பால் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், காலை 10 மணிக்கு வடம் பிடிப்பு நிகழ்ச்சியுடன் திருத்தேரோட்டம் தொடங்கப்படுகிறது.
பிரமோத்ஸ விழாவின் முக்கிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு செடில் திருவிழா தொடங்கப்படுகிறது. திரளான பக்தர்கள், தங்கள் குழந்தைகளை செடில் சுற்றி நேர்த்திக் கடன் நிறைவேற்றுவர் என்பதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com