டெல்டா விவசாயத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை தேவை

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி காவிரி டெல்டா விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி காவிரி டெல்டா விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் இரா. முத்தரசன். 
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பல ஆண்டுகளமாக நடைபெற்று வரும் விநாயகர் சதூர்த்தி விழாவின்போது, களிமண்ணில் உருவம் செய்து, கொழுக்கட்டை படைத்து வணங்குவதான் பாரம்பரியம். 
ஆனால், இப்போது நடக்கும் செயல்கள் கடவுளின் பெயரில் நடைபெறும் தவறான கலாசாரமாக அமைந்து வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு சாதகமான நிலைபாட்டை கொண்டுள்ளது. ஊழல் மலிந்த மாநிலமாக தமிழகம் மாறிவருகிறது. சிறைச்சாலைகளில் கூட ஊழல் அதிகரித்து சமூக விரோதிகளுக்கு சாதகமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. 
மத்திய அரசின் செயல்பாடுகள் அரசியல் அமைப்பு சட்டப்படியான  எழுத்துரிமை, பேச்சுரிமை என அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு, கருத்துரிமை கோருவோர் மிரட்டப்படுகிறார்கள், அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில்தான் அரசியல் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கம் இணைந்து பிரசார இயக்கம் நடத்துகிறோம்.திங்கள்கிழமை (செப்.17) 6 இடங்களில் இருந்து தொடங்கி செப். 23- ஆம் தேதி திருப்பூரில் பொதுக் கூட்டத்துடன் பிரசாரம் நிறைவடைகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி காவிரிப் படுகை விவசாயத்தை காப்பாற்ற மாநில அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலையில் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை, ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல் முரண்பாடாக உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் த. நாராயணன், ஒன்றியச் செயலர் சிவகுரு. பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com