ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

செம்பனார்கோவில் குமரன் கோயிலில் தைப்பூசத் திருவிழா

நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள குமரன்கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.  

Updated On :23 ஜனவரி 2019, 9:28 am IST

நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள குமரன்கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.  
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன. 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
விழாவின் 8-ஆம் நாளில் முருகப் பெருமான், சுவர்ணபுரீசுவரர் கோயிலில் எழுந்தருளி சுகந்த குந்தளாம்பிகை அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், பின்னர் குமரன் கோயில் எதிரே சூரசம்ஹாரமும் நடைபெற்றது. 9-ஆம் நாள் இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. 
தொடர்ந்து, தைப் பூசத் தினமான திங்கள்கிழமை காலை வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்ரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, உலக நன்மைக்காக சண்முகார்ச்சனை நடைபெற்றது.
பின்னர், வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் காவிரி ஆற்றங்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. 
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் ஆய்வாளர் பாலு, செயல் அலுவலர் முருகேசன் மற்றும் குடியிருப்போர் பொது நலச் சங்கத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.