நாகையில் நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்பு தொடக்கம்

மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நாகை, வாசல் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நாகை, வாசல் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
நாகை, வெளிப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தின் மேல்தளத்தில் இயங்கும் இந்தப் பயிற்சி மையத்தில், மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்து  மாணவ, மாணவியருக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
இந்தப் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்ச்சிக்கு, வானவில் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பிரேமா ரேவதி தலைமை வகித்து, பயிற்சியின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். பேராசிரியர் தெ. வெற்றிச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் செகுரா ஆகியோர் பேசினர்.
தொடர்புக்கு...
இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், நாகை, சட்டையப்பர் கீழவீதியில், வெளிப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் முதல் தளத்தில் இயங்கும் வாசல் பயிற்சி மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 87786 39275 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com