மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் வாக்குச் சேகரிப்பு
By DIN | Published On : 14th April 2019 05:42 AM | Last Updated : 14th April 2019 05:42 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகே உள்ள வலிவலம், கொடியாலத்தூர் கிராமத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தனர்.
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவை ஆதரித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் வலிவலம் மற்றும் கொடியாலத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில், வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனர். இதில், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் ப. கோவிந்தராஜன், தெற்கு ஒன்றியச் செயலாளர் கே. பழனியப்பன், திமுக மாவட்டத் துணை அமைப்பாளர் ஜி. ஜீவானந்தம், கொடியாலத்தூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் என். ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஆர். ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கதிர் அறுவாள் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தனர்.