அம்பேத்கர் பிறந்த நாள் விழா

சட்டமேதை அம்பேத்கரின் 128-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாகையில் அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனர்.


சட்டமேதை அம்பேத்கரின் 128-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாகையில் அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனர்.
 நாகை வண்டிப்பேட்டை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாகை சட்டப் பேரவைத் தொகுதிச் செயலாளர் ப. அறிவழகன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அக்கட்சியின் தொகுதி துணைச் செயலாளர் க. சுரேஷ், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வி. முத்துவளவன், வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த விஜயராகவன், மையப் பொறுப்பாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.
திருமருகலில்...
திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அம்பேத்கரின் உருவப்படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திட்டச்சேரி பேரூராட்சி கழக செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். ஒன்றியத் துணைச் செயலாளர் ஜவஹர் முன்னிலை வகித்தார். நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் பரிமளச்செல்வன், மாவட்டத் துணை செயலாளர் பேரறிவாளன், வழக்குரைஞர் பிரிவு செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில், மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. ராசேந்திரன் மாலை அணிவித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி சி.கே. போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் அதன் மாநிலச் செயலாளர் எஸ்.கே. வேதரத்தினம், நிர்வாகி எஸ். வேதரத்தினம், தொழிலதிபர் சண்முகம் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலாளர் மா.மீ.புகழேந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முத்துராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சிவருகு. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் குணவேந்தன், செல்வராசு உள்ளிட்டடோர் பங்கேற்றனர். இதேபோல், அதிமுக சார்பில் வழக்குரைஞர் நமச்சிவாயம், அமமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் இளங்கோவன், ஊழலுக்கு எதிரான இயக்கம் சார்பில் அதன் வேட்பாளர் வேதரெத்தினம் உள்பட பலரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சீர்காழியில்...
சீர்காழியில் அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தலைமை வகித்தார்.  நகரச் செயலாளர் பக்கிரிசாமி,  ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம்,  பேரூராட்சி கழக செயலாளர் போகர்ரவி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சக்தி, பூராசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், அமமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் என். சந்திரமோகன் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் ஏ. வீரா, நகரச் செயலாளர் ஏகே.சுரேஷ், ஒன்றியச் செயலாளர்கள் பொற்செழியன், பாரிவள்ளல் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலப்பெரும்பள்ளத்தில்...
 செம்பனார்கோவில் ஒன்றியம் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ விஜயபாலன், தொகுதி இணைச் செயலாளர் கபாடி பாண்டியன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன், கும்பகோணம் சட்டப் பேரவை உறுப்பினர் அன்பழகன், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்பழகன், மாவட்டப் பொருளாளர் பூம்புகார் ரவி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல், தருமகுளம் கடைவீதியில் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முகாம் அமைப்பாளர் சுபாஷ், ஊராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர் தவமணி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பொறையாறில்...
பொறையாறு அருகே உள்ள ஆக்கூரில் கிராம பொது நலச்சங்கம் சார்பில்,  அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவர் செல்வ அரசு தலைமை வகித்தார்.   ஓய்வுபெற்ற ஆசிரியர் கோவிந்தராஜ், செயலாளர் ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோபிநாத், பாரதி, சக்தி தனபால், இளந்தேவி, மணிமேகலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com