சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து மதுபானக் கடைகளும் ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
  மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின் 48 மணி நேரத்துக்கு முன்பாக மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்ற விதிப்படி, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்.16) 10 மணி முதல் வியாழக்கிழமை (ஏப்ரல் .18) நள்ளிரவு 12 மணி வரை அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது குடிக்கும் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது தமிழ்நாடு மதுபான சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai