சுடச்சுட

  

  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ...

  மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். ஆசைமணி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 
  சித்தர்காடு கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் எஸ். ஆசைமணி தொடர்ந்து, மூவலூர், மாப்படுகை, வில்லியநல்லூர், திருவிழந்தூர், மணக்குடி, மன்னம்பந்தல், கோடங்குடி, அகரகீரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்துவிட்டு பட்டமங்கலம் கிராமத்தில் வாக்குச் சேகரிப்பை நிறைவு செய்தார். வேட்பாளருடன், மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ரெங்கநாதன், அதிமுக தெற்கு ஒன்றியச் செயலர் சந்தோஷ்குமார் மற்றும் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

  பூம்புகாரில்...
  சீர்காழி ஒன்றியத்துக்குள்பட்ட பூம்புகார், வானகிரி, மேலையூர், மணிக்கிராமம் உள்ளிட்ட பகுதியில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செ. ராமலிங்கம் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். பூம்புகார் தருமகுளம் பகுதியில் வாக்குச் சேகரித்தபோது, என்னை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்தால் விவசாயிகள், மீனவர்கள் நலன்காக்கும் வகையில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கபட்ட வேளாண்மை மண்டலமாக மாற்றபடுவேன் என்றார். வேட்பாளருடன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் சித்திக், சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலர் சசிக்குமார், மாவட்ட பொருளாளர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். 


  குத்தாலத்தில்...
  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செ. ராமலிங்கத்தை ஆதரித்து, திங்கள்கிழமை, திமுக கூட்டணிக் கட்சியான மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில், அதன் நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் குத்தாலம் கடைவீதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில், நகர திமுக செயலர் எஸ். சம்சுதீன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ரா. மனோகரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ். குஞ்சு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

   

  செம்பனார்கோவிலில்...
  செம்பனார்கோவிலில் திங்கள்கிழமை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செ. ராமலிங்கத்தை ஆதரித்து மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரசாரம் செய்தார்.  
  அவருடன், திமுக மாவட்ட துணைச் செயலர் ஞானவேலன், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியச் செயலர் அன்பழகன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர். 
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai