சுடச்சுட

  

  தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நாகையில் வாக்குப் பதிவு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம்

  By DIN  |   Published on : 16th April 2019 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் மதுரை (தனியார்) நிறுவனத்தின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்கள் சார்பில் வாக்குப் பதிவு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நாகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  தகுதியான அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட, நாகை, திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. 
  இதற்கான தொடக்க நிகழ்ச்சி, நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்து, கொடி அசைத்து வாகனப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர், பிரசார வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கையெழுத்துப் பதாகையில் கையொப்பமிட்டு, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, நாகை மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கையெழுத்து இயக்கப் பதிவேட்டில் கையொப்பமிட்டனர்.
  பின்னர்,  நாகூர் தர்கா அலங்கார வாசல், திட்டச்சேரி, நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி, புத்தூர், நாகை அவுரித் திடல், வேளாங்கண்ணி, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நாகை புதிய கடற்கரை ஆகிய பகுதிகளில் இந்தப் பிரசாரம் நடைபெற்றது. இப்பகுதிகளில் திரளான பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் வாக்குப்  பதிவை உறுதி செய்யும் வகையில்,  கையெழுத்துப் பதிவேட்டில் கையொப்பமிட்டனர்.
  2-ஆம் நாள் பிரசாரம்...
  நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பாக்கோவில், கீழ்வேளூர், திருவாரூர், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை, இந்த வாகனப் பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai