சுடச்சுட

  

  மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்க அலுவலகத்தில், சனிக்கிழமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 
  மயிலாடுதுறை உலகத் தமிழ்க் கழகத் தலைவர் கோ. அரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்க நிறுவனர் ஜெனிபர் எஸ். பவுல்ராஜ், தலைவர் க. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கேசிங்கன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தமிழாசிரியர் ஜெ. வீரபாண்டியன், யாழிசை மாமணி கே.எஸ். மதிவாணன், சன்மார்க்க சீலர் சா.தி. ராமலிங்கம், தேரிழந்தூர் கம்பர் கழக இணைச் செயலர் மு. ஜானகிராமன், பணி நிறைவு பெற்ற வட்டாட்சியர் வெ. ராமகிருஷ்ணன் ஆகியோர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து புகழுரை ஆற்றினர். முன்னதாக, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai