சுடச்சுட

  

  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. 
  வேதாரண்யத்தில் வட்டார விவசாய சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுவதாலும், காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதை கண்டித்தும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி  டெல்டா என்று அறிவிக்க கோரியும், கஜா புயலின் தாக்கத்தை தேசியப் பேரிடராக அறிவிக்காததை கண்டித்தும்,  புயலுக்கு பின் ஆசிய வளர்ச்சி வங்கி வட்டி இல்லாத கடன் தருவதாக கூறியும் அதை பெற்று வளர்ச்சி பணியும்  நிவாரண பணியும் செய்யாததை கண்டித்தும்.
   ரூ. 980 கோடி அறிவிக்கப்பட்ட பயிர்க் காப்பீடு கடந்த மூன்று ஆண்டுகளாக பெற்றுதராததை கண்டித்தும், கஜா புயல் தாக்கத்தில் முற்றிலும் அழிந்துபோன சவுக்குக்கு நிவராணம் வழங்காததை கண்டித்தும், விவசாயிகளையும் கடற்கரையோர மீனவர்களையும் அழிக்கும் சாசர்மாலா திட்டத்தை  எதிர்த்தும்,  உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளின் மீது வழக்குத் தொடுப்பதை கண்டித்தும் அதனால் மதச்சார்பற்ற  கூட்டணி கட்சிக்கு விவசாய சங்கத்தின் ஆதரவு தெரிவிப்பது என்றும் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவை ஆதரிப்பது என்று  முடிவுசெய்யப்பட்டது. சங்கத் தலைவர் ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செயலர் ஒளிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai