வெடிக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப்ரல் 19-ஆம் தேதி வரை வெடிக் கடைகளை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப்ரல் 19-ஆம் தேதி வரை வெடிக் கடைகளை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. இதையொட்டி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து வெடிக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள், வெடிபொருள்கள் கிடங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையையொட்டி, மே 21-ஆம் தேதி முதல் மே 24-ஆம் வரையிலும் வெடிக் கடைகள், வெடிபொருள் கிடங்குகளை மூடி வைக்க வேண்டும்.  இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com