மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

வேதாரண்யம் அருகேயுள்ள நாலுவேதபதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. 

வேதாரண்யம் அருகேயுள்ள நாலுவேதபதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. 
விழாவில், அம்மன், கப்பல், சிவன், காளியம்மன், உருவங்கள் கொண்ட காவடி எடுத்தனர். தொடர்ந்து, ஏராளமான பெண்கள் மாரியம்மனுக்கு விளக்கு ஏந்தியும் சீர்வரிசை, பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து, கோலாட்டம்,  சிலம்பம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நள்ளிரவில் நடைபெற்ற தீமிதி விழாவில், ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர், வாணவேடிக்கை, அன்னதானம் நடைபெற்றது. அதிகாலை (திங்கள்கிழமை) அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் ராஜதுரை, முருகையன், நாராயணசாமி, பாலசுப்பிரமணியன்,  உதயகுமார், சந்திரசேகரன், நாராயணசாமி, சண்முகராஜன், வாசுதேவன், ஊராட்சி முன்னாள் தலைவர் கனகராஜன், கோயில் நிர்வாகி ராகவன் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com