பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 21st April 2019 04:17 AM | Last Updated : 21st April 2019 04:17 AM | அ+அ அ- |

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் மதுமிதா (585), நளினி (580), பாஹிமாமுப்ரின் (572) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கணிதத்தில் சிவதர்ஷின், கனிப்பொறியியலில் நளினி, மீனாட்சி, பொருளியலில் சினேகா, வணிகவியலில் அபர்ணா, மதுமிதா, சஜல்ஜெயின், கணக்குப் பதிவியலில் மதுமிதா, மோனிகா, சஜல்ஜெயின் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். பாடவாரியாக தமிழில் சதீஷ், ஆங்கிலத்தில் மோனிகா, இயற்பியலில் நளினி, வேதியியலில் நளினி, உயிரியலில் சினேகா ஆகியோர் முதல் மதிப்பெண்கள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் கே.வி. ராதாகிருஷ்ணன், செயலர் அனிதா, இயக்குநர்கள் பிரவின்வசந்த்ஜெபஸ், அனுஷா, அலெக்சாண்டர், பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங், பள்ளி துணை முதல்வர் சரோஜா ஆகியோர் பாராட்டினர்.