மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்

மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
மக்களவைத் தேர்தலின்போது மயிலாடுதுறை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மயிலாடுதுறை, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 
இதைச் சுற்றி எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள், தமிழக அதிரடிப் படையினர், மாவட்ட ஆயுதப்படை வீரர்கள், தாலுகா காவல் நிலைய போலீஸார் என 4 அடுக்குப் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சீ. சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்குச் சென்று ஆய்வு செய்தனர். 
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கூறியது:
 மயிலாடுதுறை மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகளில் பூட்டி, சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் 4 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளே வந்து பார்வையிட வசதியாக அவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டுப்பாட்டு அறை வரை செல்லலாம். சீல் வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். கட்டுப்பாட்டு அறையின் கீழே உள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டையும் முகவர்கள் காணலாம் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் இ.கண்மணி, காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, வட்டாட்சியர் மலர்க்கொடி மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com