முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
காவிரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 04th August 2019 01:06 AM | Last Updated : 04th August 2019 01:06 AM | அ+அ அ- |

ஆடிப்பெருக்கை முன்னிட்டும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து விவசாயம் செழிக்க வேண்டியும், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் உள்ள காவிரி அம்மனுக்கு, சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதானை நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், காவிரி அம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டு கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்து, விவசாயம் செழிக்க வேண்டியும், காவிரி அம்மனுக்கு, பால், பன்னீர், இளநீர், திரவியப்பொடி, தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் மற்றும் புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை செய்யப்பட்டது. அம்மனுக்கு பச்சை பட்டாடை உடுத்தப்பட்டு, வளையல் மாலை அணிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று காவிரி அன்னையை வழிபட்டனர்.