முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
கிராமங்களில் வசிக்காத வி.ஏ.ஓ-க்கள் குறித்து புகார் அளிக்கலாம்
By DIN | Published On : 04th August 2019 01:06 AM | Last Updated : 04th August 2019 01:06 AM | அ+அ அ- |

கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பொறுப்பு கிராமங்களில் தங்கிப் பணியாற்றாவிட்டால், அது குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சென்னை, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், நாகை மாவட்ட வருவாய் அலகில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பொறுப்பு கிராமங்களில் தங்கியிருந்து பணியாற்றாமல் இருப்பது தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை (பொது) தலைவராகவும், அலுவலக மேலாளர் (பொது), அலுவலக மேலாளர் (குற்றவியல்) ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு மாவட்ட அளவிலான குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களுடைய பொறுப்பு கிராமத்தில் வசிக்காதது குறித்து பொதுமக்கள், குறைதீர் குழுத் தலைவரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.