முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மயிலாடுதுறை தனி மாவட்டக் கோரிக்கை: ஆக. 15-இல் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
By DIN | Published On : 04th August 2019 01:06 AM | Last Updated : 04th August 2019 01:06 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை தனி மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாதாந்திரக் கூட்டம், சின்னக்கடைத் தெருவில் உள்ள ஓய்வூதியர் சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஆர்.ராமானுஜம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், காவிரி அமைப்பின் தலைவர் ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்? என்ற நூலை அனைவருக்கும் வழங்கி, புதிய மாவட்டம் அமைய தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஆலோசனைகளையும், பங்களிப்பையும் கேட்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் ஜி.செளரிராஜ் நன்றி தெரிவித்தார்.