குடிநீர் குழாயில் உடைப்பு: 3 நாள்களாக வீணாகும் தண்ணீர்

சீர்காழி அருகே புத்தூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 நாள்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது.

சீர்காழி அருகே புத்தூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 நாள்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது.
சீர்காழி அருகே புத்தூரிலிருந்து மாதானம் செல்லும் சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கத்திலிருந்து குழாய் மூலம், பழையபாளையம் கிராமத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பப்பட்டு அங்கு நீர் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் மின்மோட்டார்களின் மூலம் பல கிராமங்களுக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. 
இவ்வாறு வடரெங்கத்திலிருந்து பழையபாளையம் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் புத்தூர் டாஸ்மாக் கடை அருகே புத்தூரிலிருந்து மாதானம் செல்லும் நெடுஞ்சாலையில் நடுவே தண்ணீர் வெளியேறி சாலையோரமுள்ள வயலுக்குள் வீணாகச் சென்று தேங்குகிறது. கடந்த மூன்று நாள்களாக வீணாக தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், உடைப்பை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com