சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பட்டிமன்றம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் விழிப்புணர்வுப் பட்டிமன்றம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகை பொது மேலாளர் கே. தசரதன் தலைமை வகித்தார். முன்னதாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த 4- ஆம் கட்ட  கலந்தாய்வு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் எஸ்.எஸ்.ராஜ்மோகன் (திருச்சி), கே. குணசேகரன் (கரூர்) ஆகியோர் பேசினர்.
 தொடர்ந்து, விபத்துக்கு பெரிதும் காரணம் அதிவேகமா ? கவனக்குறைவா?  கால நிர்வாகமா ? எனும்  தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணர்கள் பேசினர். அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் இயக்குநர் ஆர். பொன்முடி பட்டிமன்ற நடுவராக செயல்பட்டார். 
 இந்நிகழ்ச்சிகளில் அரசு போக்குவரத்துக் கழக துணைப் பொது மேலாளர்கள் கே.ஆதப்பன், எஸ்.ராஜா, எம். சிதம்பரகுமார், கோட்ட மேலாளர்கள் எஸ்.ஸ்ரீதர், எஸ்.செந்தில்குமார், வணிக துணை மேலாளர் கே. இளங்கோவன் மற்றும் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com