அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணபிக்கலாம்
By DIN | Published On : 09th August 2019 08:00 AM | Last Updated : 09th August 2019 08:00 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ளஅரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு இட ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஆக. 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தொழிற் பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே சமர்பிக்கவேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண் மூலம் மாவட்ட கலந்தாய்வு தேதி பின்னர்அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு இணையதள மூலமும், முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் நாகப்பட்டினம் என்ற முகவரியில் கூடுதல் தகவல்களை பெறலாம் என தெரிவித்துள்ளார்.