ஆக.15-இல் மதுபானக் கடைகள் மூடல்
By DIN | Published On : 09th August 2019 06:55 AM | Last Updated : 09th August 2019 06:55 AM | அ+அ அ- |

சுதந்திர தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் ஆக. 15-ஆம் தேதி மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கடைகள், மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, அனைத்து வகையான மதுபானக் கடைகளுக்கும், மதுக்கூடங்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை மீறி யாரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால், தொடர்புடையோர் மீது மதுபான விதிமுறைகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.