நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 09th August 2019 08:01 AM | Last Updated : 09th August 2019 08:01 AM | அ+அ அ- |

நாகையில் நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை சி. எஸ். மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் மணவாளன் தலைமை வகித்தார். நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி, பெருமாள் தெற்குவீதி, நீ லா தெற்குவீதி வழியாகச் சென்று பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற நீர் மேலாண்மை கருத்தரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம். ஞானசேகரன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. முத்தமிழ் ஆனந்தன் ஆகியோர் நீர் மேலாண்மையின் அவசியம் குறித்துப் பேசினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், தேசிய மாணவர் படை முன்னாள்அலுவலர் டி. ராஜேந்திரன், ஊர்க்காவல் படை மணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். பள்ளித் தலைமையாசிரியை ( பொ) மெர்சி மார்க்ரெட் வரவேற்றார். தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியை சித்ரா மணிமேகலை நன்றி கூறினார்.