சுடச்சுட

  

  திருமருகல் அருகே தேவங்குடி பெரியகுளத்தில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  திருமருகல் ஒன்றியம், இரவாஞ்சேரி ஊராட்சி தேவங்குடியில் 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பெரியகுளம். இந்த குளம் கடந்த  2 ஆணடுகளுக்கு முன்பு வண்டல் மண் திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டது. தற்போது இக்குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் சூழ்ந்து காணப்படுகின்றன. 
  மேலும், இப்பகுதியில் கருவேலமரங்கள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். ஆகையால் குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  மேலும், இந்த குளத்தை தூர்வாரி புனரமைப்பதன் மூலம் புத்தாற்றில் இருந்து வரும் காவிரி நீரும், பருவமழையும் தேங்கி குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai