சுடச்சுட

  

  சீர்காழியில் பாரதிய கிஸான் சங்கம் சார்பில், பாரம்பரிய விதைகள் மீது விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் மரபணு மாற்ற விதைகளை பரப்பிடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஜி.திலகர் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் என்.டி. பாண்டியன்  கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் என்.இலங்கேஸ்வரன், மாவட்ட பொருளாளர் எம்.திருஞானம், ஒன்றிய செயலாளர் குழந்தைவேலு, மாவட்ட இயற்கை விவசாயச் செயலாளர் எஸ்.செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai