சுடச்சுட

  

  திருமருகல் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சிக்குள்பட்ட அருள்மொழிதேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சத்துணவு மையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
  இப்பள்ளியின்  வகுப்பறை, குடிநீர்த் தொட்டி, கழிவறை போன்றவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க. அன்பரசு, ஜி.ஆர். இளங்கோவன் (கிராம ஊராட்சி) ஆகியோர் ஆய்வுசெய்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவைப் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் க.தமிழ்ச்செல்வன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai